முஸ்லிம் காங்கிரஸை போடுகாயாகவும், கிள்ளுக்கீரையாகவும் கையாள இடமளிக்க முடியாது.
- சம்மாந்துறையில் அமைச்சர் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வெறும் போடுகாயாகவும், கிள்ளுக் கீரையாகவும் அரசாங்கம் கையாள்வதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாதென குறிப்பிட்டுள்ள கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவ+ப் ஹக்கீம் கட்சியின் வலிமையைவும், பேரம் பேசும் ஆற்றலைவும் மலினப்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும் உறுதிபடக் கூறினார்.
சம்மாந்துறையில் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். வேட்பாளர் எம்.ஐ.எம் மன்சூர் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. சம்மாந்துறையைச் சேர்ந்த மற்றைய வேட்பாளர் ஐ.எல்.எம். மாஹிர் கொழும்பு சென்றிருந்தபடியால் இந் நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
கட்சித் தொண்டர்கள் மத்தியில் அங்கு உரையாற்றும் பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவைக் கண்டு நாங்கள் இந்தத் தேர்தலில் சேர்ந்து போட்டியிடவிருந்த கட்சி இப்பொழுது ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஆகிவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் எங்களது வாக்களிப்பு விகிதம் 80 வீதத்தை தாண்டுமானால் நிச்சயமாக இந்த மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் மிக இலகுவாக வெற்றிகொள்ள முடிவும். தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்வது அதை விட முக்கியமாகும். தமது சொந்த நலன்களுக்காகவும் வசதி வாய்ப்புகளை இலகுவாக பெரும் குறுகிய நோக்கத்திலும் எமது கட்சியினூடாக வெற்றி பெற்ற மறுகணமே கட்சியைக் காட்டிக்கொடுத்து துரோகமிழைத்த வரலாறு இருக்கிறது.
வெற்றி பெறும் ஒவ்வொரு தலைக்கும் விலைபேசப்படக்கூடிய நிலைமை உருவாகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே எமது வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய நெறிமுறைகளை அனுசரித்து கண்ணியமான உலமாக்கள் முன்னிலையில் பைஅத் என்னும் உறுதிமொழியை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சட்டப+ர்வமான ஆவணங்களைவும் நாம் தயார்படுத்திவுள்ளோம்.
மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் நேச அணியினர் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து செயற்பட முன்வந்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. இன்னும் முக்கியஸ்தர்கள் சிலரும் எமது கட்சிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளதும் சம்மாந்துறையில் கட்சியின் வாக்கு பலத்தை மேலும் அதிகரிக்கும். முரண்பாடுகள் களையப்பட்டு ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை சம்மாந்துறையில் நிலவுவது மகிழ்ச்சியைவும் மன நிறைவைவும் தருகிறது என்றார்.
வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் கட்சியின் முழு நேர தொண்டர்களாக பணியாற்றுவதற்கு இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் தலைவர் ஹக்கீம் முன்னிலையில் தமது பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.


